Maruthu’s Weblog

Just another WordPress.com weblog

எனலாம். அவர்கள் ஒன்றையுமே விட்டு வைப்பதாக இல்லை. அமெரிக்கா, யப்பான், ஜேர்மனி ஆகியவற்றின் ஏகபோகமாக இருந்த மோட்டார் கார் தயாரிப்பிலும் அவர்கள் இறங்கிவிட்டார்கள். விலையும் குறைவு பொருளும் விலைக்கேற்றது.

சீனா தயாரிக்கும் ‘முத்துமாலை” வேறு வகையானது. இந்து மாகடலோர நாடுகள் பலவற்றுடன் இணைந்து சீனா பாரிய துறைமுகங்களை அமைத்து வருகிறது. ஒவ்வொரு துறைமுகமும் ஒரு முத்தாகவும் அனைத்தும் இணைந்து சீனாவுக்குச் சார்பான முத்து மாலையாகவும் இடம்பெறுகின்றன. இராணுவ ஆய்வாளர்கள் இதை ஊhiயௌ Pநயசட நேஉமடயஉந என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது சீனாவின் முத்துமாலை என்று பொருள்.

மூன்றாம் உலகப் போரின் வெற்றி தோல்வி இந்து மாகடலில் தீர்மானிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியானதொரு போர் நடக்குமோ தெரியவில்லை. ஆனால் அதற்கான அணி வகுப்புக்கள் தொடங்கிவிட்டன. மூன்றாம் உலகப்போரில் என்ன வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. நான்காம் உலகப் போரில் கல்லும் வில்லும், அம்பும் ஈட்டியும் பயன்படுத்தப்படும் என்று மாத்திரம் உறுதியாக நம்பலாம். இந்து மாகடலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? மத்திய கிழக்கில் இருந்து ஆசியாவின் பசுபிக் எல்லை வரையான இந்து மாகடல் ஊடான கடற் பாதைகள் வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத முக்கியத்துவம் பெற்றுள்ளன. உலகின் 70 வீதமான எண்ணை இக்கடற் பாதைகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக மிகக்கூடுதலான எண்ணையைப் பயன்படுத்தும் சீனாவுக்கு இக்கடற் பாதைகளின் பாதுகாப்பு அதிமுக்கியமாகியுள்ளது.

இந்தியக் கடற்படையின் கொள்கை வகுப்பாளரான கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே.எம்.பணிக்கர் 1945 தொடக்கம் இந்து மாகடல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அரபிக்கடல் வங்காள விரிகுடா என்பன உள்ளிட்ட கடற்பிராந்தியங்களும் அவற்றை ஒட்டிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று பணிக்கர் வலியுறுத்தினார். அவர் மறைந்து பல வருடங்களாகியும் அவருடைய இந்தியக் கடலாதிக்கக் கோட்பாட்டை இந்தியக் கடற்படை அதிகாரிகள் மறந்து விடவில்லை. ஜூலை 2007 இல் தனது உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த இந்தியக் கடற்படை அட்மிரல் சுரேஷ் மேத்தா ‘உலக அரங்கில் இந்தியா தனக்குரிய இடத்தைப் பெற முயற்சிக்கிறது” என்றார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரான சித்தான்சு கார் ‘இந்து மாகடலின் கடற் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு எமக்கு இருக்கிறது” என்றார்.

இந்து மாகடலின் கடற்பாதைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பலத்தையோ பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையிலோ இந்தியா இருக்கவில்லை. எண்ணை ஏற்றிச்செல்லும் உலகின் எல்லாக் கடற்பாதைகளிலும் அமெரிக்கக் கடற்படை ஆதிக்கம் செலுத்துகிறது. மத்திய கிழக்கின் ஹோர்முஸ்குடா, மலாக்கா நீரிணை, தென்கிழக்கு ஆசிய கடற்பாதைகள் அமெரிக்கக் கடற்படையின் கண்காணிப்பில் இருக்கின்றன. அது மாத்திரமல்ல சீனாவும் இந்து மாகடலில் தனது பிரசன்னத்தை உறுதி செய்து வருகிறது. இந்தியா ஒருபோதும் இந்து மாகடலாதிக்கத்தை எட்டக்கூடாது என்பது சீனாவின் நீண்ட நாட் கொள்கை. மியன்மார் எனப்படும் பர்மாவிற்குச் சொந்தமான கொக்கோஸ் தீவுகளில் பாரியளவு துறைமுக வசதியையும் கண்காணிப்பு மையத்தையும் சீனா நிறுவியுள்ளது. அதிலிருந்து இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தையும் ஒரிசா மாநிலத்தில் இந்தியா நடத்தும் நீண்டதூர வீச்சு ஏவுகணைத் தளத்தையும் சீனாவால் கண்காணிக்க இயலும்.

கொக்கோஸ் தீவின் துறைமுக வசதிகளுக்கு நிகரானதொன்றைச் சீனா பெரும் பொருட்செலவில் பாகிஸ்தானின் குவதரில் கட்டியெழுப்பியுள்ளது. அரபிக் கடல் தொட்டு மத்திய கிழக்கின் பாரசீக வளைகுடா வரை குவதரில் இருந்து கண்காணிக்க முடியும். வைத்து எடுத்துச்செல்லும் களஞ்சிய வசதிகளையும் குவதர் கொண்டுள்ளது. இன்று சீனாவின் எண்ணைத்தேவையில் அரைப்பங்கு மலாக்கா நீரிணை ஊடாக எடுத்துச்செல்லப்படுகிறது. தாய்வான் பிரச்சினை சூடுபிடித்தால் மலாக்கா நீரிணை ஊடாக எடுத்துச்செல்வதை அமெரிக்காவால் தடுக்க முடியும். மாற்று யோசனைகளைச் சீனா கொண்டுள்ளது. குவதரில் சேமித்து வைக்கப்படும் எண்ணை பாகிஸ்தா னில் இருந்து சீனாவுக்குச் செல்லும் கரக்கோரம் இமயமலை நெடுஞ்சாலை மூலம் கொண்டு செல்லும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தனது எண்ணைத் தேவைகளுக்குச் சீனா தனது முழுத்தேவையில் 45 வீதத்திற்கு மேலாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி இருப்பதால் இந்து மாகடலின் கடற்பாதைகளின் பாவனையைச் சீனாவால் தவிர்க்கமுடியாது. இதற்காகச் சீனா தனது கடற்படையைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. சீனக் கடற்படையின் வேகமான வளர்ச்சியும் அணுசக்தியில் இயங்கும் கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்தியக் கடற்படைக்கு மாத்திரமல்ல எதிர்காலத்தில் அமெரிக்கக் கடற்படைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பது உறுதி. முன்னொரு காலத்தில் நிலத்தைக் கைப்பற்றுவதற்காக வல்லாதிக்க நாடுகள் சண்டையிட்டன. இப்போது எண்ணைக்கும் எரிவாயுவுக்குமாகச் சண்டை செய்யும் காலம் பிறந்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் தொடங்குமாயின் அது எண்ணை வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இருக்கும் என்பது ஆய்வாளர் முடிவு.

டிசம்பர் 20, 2004 ஆம் வாரத்திற்குரிய நியூஸ்வீக் சஞ்சிகை மூலம் கசிய விடப்பட்ட செய்திப்படி சீனா-அமெரிக்கா எண்ணைப் போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தனது எண்ணைத் தேவையைப் பெறும் முயற்சிக்கும் பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் அமெரிக்கா பாரியளவில் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சீனா தீர்மானித்து விட்டது. அதன் அடிப்படையில் சீனா தனது பாதுகாப்பிற்காக ‘முத்துமாலை”யைத் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூஸ்வீக் செய்தி வெளியிட்டுள்ளது. ‘முத்துமாலை” என்ற பதம் எதைக் குறிக்கும் என்ற விளக்கத்தையும் அதே அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

துறைமுகங்கள், கண்காணிப்பு மையங்கள், விமான நிலையங்கள் ஆகிய மூன்றும் முத்துமாலையில் இடம்பெறும். முத்துமாலையின் பிரதான நோக்கம் மத்திய கிழக்கு, ஆபிரிக்கப் பிராந்தியங்களில் இருந்து தென்சீனக் கடலுக்கு எண்ணைக் கப்பல்களைப் பாதுகாப்பாக நகர்த்துவதாகும். முத்துமாலை நன்கு திட்டமிட்டுத் தயாரிக்கப்படுகிறது. ஆங்காங்கே மாற்று ஒழுங்குகளும் செய்யப்படுகின்றன. கரத்கோரம் மலைப்பாதை மூலம் குவதரில் இருந்துகொண்டு செல்வது பற்றி ஏற்கெனவே பார்த்தோம். மியன்மாரின் வங்காள விரிகுடா எல்லையில் இருந்து யூனான் மாகாணம் வரை ஒரு நெடுஞ்சாலையை சீனா அமைத்து வருகிறது.

மலாக்கா நீரிணையில் முழு அளவில் நம்பியிருப்பதை இந்தத் தரைப்பாதை தவிர்க்கும் என்று சீனா நம்புகிறது. தாய்லாந்திற்கும் மலேசியாவிற்கும் இடையில் இருக்கும் ஒடுங்கலான தரைப்பரப்பில் பனாமாக் கால்வாய் போன்றதொரு ஒழுங்கைச் செய்யும் தூர நோக்குத் திட்டம் சீனாவிடம் உண்டு. இது கைகூடினால் தென் சீனக் கடலும் இந்து மாகடலும் தொடக்கப்பட்டு மலாக்கா நீரிணை தனது செல்வாக்கை இழந்துவிடும். அத்தோடு சிங்கப்பூர் துறைமுகத்தின் வருமானமும் காணாமற் போய்விடும். மேற்கூறிய ஒடுங்கலான தொடுப்புத் தரைப்பரப்பின் புவியியல் பெயர் இஸ்த்மஸ் ஒப்கிறா (ஐளவாஅரள ழுக முசய). அமெரிக்காவுடன் முரண்படத் தாய்லாந்து தயங்குவதால் வெட்டும் பணிகள் இப் போதைக்குத் தொடங்கப்படமாட்டாது. இந்தக் கால்வாய் நடைமுறைக்கு வந்தால் உலக அரங்கில் தாய்லாந்தின் செல்வாக்கு பண்மடங்காக உயர்ந்துவிடும்.

முத்துமாலைத் தயாரிப்பில் சீனா வியப்பூட்டும் பல வெற்றி முத்துக்களைப் பெற்றுள்ளது. காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் தட்டிக்கொண்டுபோவது போல் மாலைதீவில் சீனத் துறைமுகம் கட்டுவதற்கு மாலைதீவு அரசு பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளது. வங்காளதேச அரசும் சித்தாகொங் துறைமுகத்தை மேம்படுத்திப் பாவிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறிலங்கா அரசும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டி விரிவாக்கும் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இத்துறைமுகம் கொடவபவட்ட பட்டன என்ற பெயரில் கிழக்கு மேற்கு கரையோரக் கப்பற்பாதையின் கேந்திர இடத்தில் இருந்தது. இதற்குப் பின் திருமலையில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும் சிறிலங்கா இராணுவத்திற்குத் தேவையான எல்லாவகை ஆயுதங்களை வழங்குவதற்கும் இந்தியா வேகமாக முன்வந்துள்ளது. அனல் மின் நிலையம் அமைக்கும் சாட்டில் இந்தியக் கடற்படையும் திருமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன. அழகான பெண்ணொருத்தி இரு வாலிபர்களுக்குச் சமகாலத்தில் கண் சாடை காட்டுவது போல் சிறிலங்கா இந்தியாவையும் சீனாவையும் விட்டுப்பிடிக்கிறது.
 
நன்றி: வெள்ளிநாதம் (26.10.07)
 

ஒக்ரோபர் 30, 2007 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக